வெற்றி மாறன் படத்தில் சிம்பு -இந்த படத்திற்காக சிம்பு என்ன செஞ்சார் தெரியுமா ?
எஸ்டிஆர் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இவர் நடிக்கும் படங்கள் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .இப்போது இவர் நடிக்கும் படம் பற்றி ஒரு பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருந்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார் சிம்பு. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 5ந் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு, திடீரென வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்தார். அவரின் 49வது படத்தை தற்போது வெற்றிமாறன் தான் இயக்கி வருகிறார்.
நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெறும் 10 நாட்களில் 10 கிலோ வரை எடை குறைத்துள்ளார்
இது படத்தை பற்றிய பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகின்றது
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது