×

ஏ.ஆர்.ரகுமான் குரலில் ‘நம்ம சத்தம்’ பாடல்.. சிம்புவின் பிறந்தநாளையொட்டி ட்ரீட் ! 

 

ஏஆர் ரகுமான் குரலில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே இந்த கதாபாத்திரம் குறித்து கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

<a href=https://youtube.com/embed/erGBtpMPi4Q?autoplay=1&mute=1&start=80><img src=https://img.youtube.com/vi/erGBtpMPi4Q/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">