×

பிரம்மாண்டமாக நடக்கும் ஆடியோ லாஞ்ச்.. விறுவிறுப்பாகும் ‘பத்து தல’ பணிகள் !

 

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் மாஸாக உருவாகியுள்ளது ‘பத்து தல’.  இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த ஆடியோ விழாவிற்கான ஏற்பாடுகளை சிம்புவின் அப்பா டி.ராஜேந்திரன் கவனித்து வருகிறார். தற்போது தாய்லாந்தில் இருக்கும் சிம்பு, விரைவில் இந்தியா வருவார் என்று கூறப்படுகிறது.