×

தள்ளிப்போகும் சிம்புவின் ‘பத்து தல’... காரணம் என்ன தெரியுமா ? 

 

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘சில்லுன்னு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

சிம்புடன் இணைந்து இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரும், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐதரபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மிரட்டலான பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் நன்றாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த படம் டிசம்பர் 23-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறாததால் ரிலீசை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சிம்புவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.