'ஒசரட்டும் பத்து தல'... வெறித்தனமாக உருவாகியுள்ள சிம்புவின் 'பத்து தல' பாடல் !
சிம்புவின் 'பத்து தல' படத்திலிருந்து வெறித்தனமாக உருவாகியுள்ள பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சிம்புவின் நடிப்பில் வெறித்தனமாக உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதனால் 'பத்து தல' படம் எப்போது வெளியாகும் என அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
முதலில் இப்படத்தில் இருந்து வெளியான 'நம்ம சத்தம்' மற்றும் சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ள ராவுடி ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது 'ஒசரட்டும் பத்து தல' என்ற பாடல் லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டு ராஜாதுரை எழுதிய இந்த பாடலை தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்யாபிரகாஷ் ஆகிய மூவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.