விராட் கோலி உடனான நினைவுகளை பகிர்ந்த சிம்பு...!
விராட் கோலியை சந்தித்தது தொடர்பாக நடிகர் சிம்பு கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் - சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தக் லைஃப். ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் பேசிய நடிகர் சிம்பு, இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். `தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, "கோலி தான் அடுத்த சச்சின் என நாள் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு `நீ சிங்கம் தான்’ பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்” என்று சிம்பு தெரிவித்தார்.
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.