×

போட்றா வெடிய... ‘பத்து தல’ டீசர் குறித்து வெளியான முக்கிய அப்டேட் !

 

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே இந்த கதாபாத்திரம் குறித்து கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.