×

தக் லைஃப் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிம்பு

 


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார். கமலுக்கு மகனாக நடிக்க உள்ளதாக சில தகவல் வெளியானது.கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34-ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. இதையடுத்து 3-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மணி ரத்னம் மிக வேகமாக படப்பிடிப்பு பணிகளை முடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தக் லைஃப் படத்தின் டப்பிங் பணியை தொடங்கியதாக அறிவித்துள்ளார். படத்தின் பணிகள் மிக விரைவில் நடைப்பெறுவதால் மிக சீக்கிரம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.