இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா நடிகர் சிம்பு...?
Updated: May 25, 2025, 17:10 IST
இயக்குனர் மோகன் ராஜாவுடன் நடிகர் சிம்பு இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ‛தனி ஒருவன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் மோகன் ராஜா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கடந்த நிலையில் மோகன் ராஜா இன்னும் அடுத்து தமிழில் படத்தை இயக்கவில்லை.
இதற்கிடையில் 'தனி ஒருவன் 2' உருவாகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதில் ஏற்படும் ஒரு சில காரணங்களால் மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.