அரசன் பட ப்ரோமோ பற்றி சிம்பு என்ன சொன்னார் தெரியுமா ?
நடிகர் சிம்பு என்றழைக்கப்படும் சிலம்பரசன் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் .இவர் நடித்த மன்மதன், கோவில், போன்ற படங்கள் பெரிய வெற்றியை தந்தது .மேலும் இவர் மணிரத்னம் மற்றும் கௌதம் மேனன் போன்றோர் இயக்கத்திலும் நடித்துள்ளார் .
சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் "அரசன்" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளிவந்துள்ளது .இந்த ப்ரோமோ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது .
இந்த நிலையில், புரோமோ விடியோ குறித்து நடிகர் சிலம்பரசன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வெற்றி மாறன் சாரின் அரசன் புரோமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன்.. நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.என்று கூறியுள்ளார். சிலம்பரசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.