×

மீண்டும் இணைகிறதா சிம்பு & யுவன் கூட்டணி… வைரல் ஆன புகைப்படம்..!

 

சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் இப்போது சிம்பு திடீரென்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் யுவன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.