நடிகர் சிம்பு பிறந்தநாளில் வெளியாகும் அடுத்த பட அப்டேட்
Jan 27, 2025, 17:24 IST

நடிகர் சிம்புவின் அடுத்த பட அப்டேட் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் ட்ராமாவான ’பார்க்கிங்’ திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தனர். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.
இப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.