சசிகுமாருடன் புதிய படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம்
Sep 12, 2024, 20:12 IST
நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ராஜுமுருகன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘நந்தன்’ வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தினை இரா.சரவணன் இயக்கியிருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சசிகுமார் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அறிமுக இயக்குநர் இயக்கவுள்ள இந்தப் படத்தினை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.