×

சிங்கம்புலி காமெடியாக நடிக்கும் புதிய படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

 
அண்ணனின் பகையை தீர்க்கும் தம்பியின் பரபரப்பான பயணத்தை பேசும் ‘செவல காள’ திரைப்படம், அறிமுக இயக்குனர் பால் சதீஷ் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. குடும்பப் பாசம், மதுரை மண்ணின் மகத்துவம், வாழ்வியல் உணர்வுகள் மற்றும் முரட்டுத்தனமான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுக்க முழுக்க வணிக ரீதியான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ராபர்ட் மாஸ்டர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் குறித்து பால் சதீஷ் கூறும்போது, ‘‘காமெடி காட்சிகளுக்காக கவுண்டமணி, செந்தில் நடிக்கும் டிராக்கை படமாக்கி, அதன் பிறகு படத்தில் சேர்ப்பார்கள். இதிலும் ரவிமரியா,சிங்கம் புலி,வடிவேலுக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதும் வலதுகரமான சுப்புராஜ், கற்பகவள்ளி, சுமதி, முருகானந்தம், முத்துகாளை, ஹலோ கந்தசாமி இவர்களை கொண்டு இதை செய்துள்ளோம். மும்பை மாடல் மீனாட்சி ஜெய்ஸ்வால், சம்பத்ராம், ஆர்யன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகும்’’ என்றார்.