ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து கூறிய சிங்கப்பூர் போலீஸ்...
Oct 30, 2024, 18:55 IST
சிங்கப்பூர் காவல்துறையினர் ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் தயாராகி வருகின்றனர்.இதையொட்டி, தமிழ் சினிமாவை பொறுத்த வரை நாளை 4 படங்கள் வெளியாக உள்ளன. சிவகார்த்திகேயனின் 'அமரன்', ஜெயம் ரவியின் 'பிரதர்', துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்', கவினின் 'பிளடி பெக்கர்' ஆகிய நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது.