காவல்துறையில் நிலவும் அரசியலை கூறும் "சிறை" பட விமர்சனம்
இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய "சிறை" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ஒரு கொலை வழக்கில் சிக்கும் எல்.கே.அக்ஷய்குமார், வேலூர் சிறையில் பல ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கிறார். அவரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக விக்ரம் பிரபு உள்ளிட்ட காவலர்கள் அரசு பஸ்சில் அழைத்துச் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் நடக்கும் எதிர்பாராத பிரச்சினையில் காவலர்கள் சிக்கிக்கொள்ள, போலீஸ் துப்பாக்கியுடன் எல்.கே.அக்ஷய்குமார் தப்பி விடுகிறார். எல்.கே.அக்ஷய்குமாரை தேடி செல்லும் போலீசாருக்கு அவரை பற்றிய பல உண்மைகள் தெரியவர அதிர்கிறார்கள்.
எல்.கே.அக்ஷய்குமார் பிடிபட்டாரா? அவரது பின்னணி என்ன? அவரால் விக்ரம் பிரபு சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? என்ற பல்வேறு கேள்வி முடிச்சுகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.
டைரக்டர் தமிழ் எழுதிய இந்த கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் கூட்டியதுடன், காவல்துறையில் நிலவும் அரசியலையும் ‘நறுக்' என்று சொல்லி குட்டு வைத்திருக்கிறார், இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.