×

‘உங்கள் ராம்’- சீதா ராமம் துல்கரின் தேங்க்ஸ் கிவ்விங் லெட்டர் வைரல்.  

 

'சீதா ராமம்' காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் தரமான கதைகளத்துடன் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்எப்படியாவது இந்த காதலர்கள் சேர்ந்துவிட மாட்டார்களா! என்பதுதான் படம் பார்த்த அனைவரின் ஒட்டு மொத்த விருப்பமாக இருந்தது. அந்த அளவிற்கு கதையை செதுக்கி இருப்பார் ஹனு ராகவபுடி. இந்த நிலையில் படம் வெளியாகி ஓராண்டு ஆனதை கொண்டாடும் விதமாக நடிகர் துல்கர் சல்மான் லெட்டர் ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளர்.

அந்த கடிதத்தில், “ ஓராண்டை நிறைவு செய்த, முடிவை மறுக்க முடியாத எபிக் திரைப்படம். மொழி ஒரு பெருட்டல்ல, உலகின் எந்த மூலைக்கு சென்றாலும்  இப்படம் குறித்த அன்பை பகிர்ந்துகொள்பவர்களை நான் சந்திக்கிறேன். இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பாக்கியம். ஹனு சார் - ராம் என்ற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. உங்கள் கனவை பெரிய திரையில் கொண்டு வந்ததற்கு உங்கள் தன்னலமற்ற அன்பு தான் காரணம்ஸ்வப்னா தத் - இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ இல்லை என யார் சொன்னார்கள்? முழு திரைப்படத்தையும் ஆதரித்த தைரியமான சூப்பர் பெண் ஹீரோ. என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கி உள்ளீர்கள். என்னுடைய திரைப்பயணத்தை புதிய கோணத்தில் மாற்றியது நீங்கள் தான். அதற்காக உங்களுக்கும் வைஜெயந்தி மூவிஸுக்கும் நான் என்றும் கடமை பட்டுள்ளேன்.” என்றும்  அஸ்வின் தத் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.