×

சிவகார்த்திகேயனுக்காக மீண்டும் களமிறங்கும் ‘ராக் ஸ்டார்’... புதிய அப்டேட் !

 

 சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளளது.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நிறைவு செய்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்த படத்தை முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடங்குவதற்கான பணிகளை ஏஆர் முருகதாஸ் செய்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘டான்’ உள்ளிட்ட படங்களுக்கு சிவகார்த்திகேயனுக்காக அனிரூத் பணியாற்றியுள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.