×

ஜிவி பிரகாஷுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்... 'SK 21' படத்தின் சூப்பர் அப்டேட் 

 

 சிவகார்த்திகேயன் நடிக்கும் 21 வது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன்,  அடுத்து  ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். 

 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. காஷ்மீரில் தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான சில பயிற்சிகளையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரபல இசைையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைப்பார். ஆனால் இந்த முறை ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ‌