×

சூரியின் படத்தை தயாரிக்கும்‌ சிவகார்த்திகேயன்... படத்தின் தலைப்பு அறிவிப்பு !

 

 சூரி நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனம் தயாரக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிப்பதை தவிர வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தை தயாரித்தார். இந்த படத்தின் நல்ல வரவேற்பையடுத்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', டாக்டர், டான் ஆகிய படங்களை தயாரித்தார். 

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தயாராகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'கொட்டுக்காளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 6வது படமாக உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கவுள்ளார். 

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி நடிகராக இருந்த சூரி, 'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தனது இரண்டாவது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.