மட்ட பாடலில் நடித்துள்ள பிரபல தமிழ் நடிகர் - வெளியான தகவல்
Sep 1, 2024, 19:20 IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முன்பதிவுகள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டு ரசிகரகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். படத்தின் நான்காவது பாடலான `மட்ட' நேற்று யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். மட்ட பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 70 லட்ச பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடலைக் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை திரிஷா நடனமாடியுள்ளார் எனவும். பாடலில் சிவகார்த்திகேயன் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. லிரிக் வீடியோவில் ஒரு கருப்பு நிற ஆடையில் ஒருவர் தோன்றுகிறார் அது சிவகார்த்திகேயன் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.