×

வீடு மாறும் சிவகார்த்திகேயன் -என்ன காரணம் தெரியுமா ?

 
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார் ,..மதராஸி படத்தில்  சிவகார்த்திகேயன் உடன் பிக் பாஸ் சாச்சனா, நடிகை ருக்மிணி வஸந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.இவர் இதற்கு முன்பு நடித்த அமரன் படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது .ஒரு  படத்திற்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் அவர் இப்போது சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு குடி பெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை பனையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் அங்கிருந்து சென்னை ஈசிஆரில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டுக்கு குடிபெயர உள்ளாராம். சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர் பனையூரில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அங்கு மாடர்ன் பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாக பனையூரில் இருந்து ஈசிஆருக்கு மாற உள்ளாராம். பனையூரில் பல கோடி மதிப்பில் அவர் பிரம்மாண்ட பங்களா கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.