×

சுதா கொங்கரா உடன் இணைகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்...?

 


சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தையும் சல்மான்கானின் சிக்கந்தர் படத்தையும் அடுத்தடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களின் பிரீ ப்ரோடக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சுதா கொங்கரா சூர்யாவுடன் இணைந்து இயக்கவிருந்த புறநானூறு படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவிற்காக உருவாக்கப்பட்ட இந்த கதைக்களத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளார். முன்னதாக சூர்யாவுடன் நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணையவிருந்த நிலையில் தற்போது துல்கருக்கு பதிலாக புதிய நடிகரை கமிட் செய்யும் வேலையில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் தொடர்ந்து 15 நாட்கள் முதல்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் தற்போது சுதா கொங்கரா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை சுதா கொங்கரா உள்ளிட்ட இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதா கொங்கரா தன்னுடைய மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இதேபோல கேவிஎன் தயாரிப்பு நிறுவனமும் இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவுடன் உருவாகவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.