×

வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயன்... ‘மாவீரன்’ புதிய வசூல் நிலவரம் !

 

சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தின் புதிய வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ‘மாவீரன்’. பேண்டஸி, குடும்ப படமாக உருவாகி உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தமிழை போன்று தெலுங்கிலும் ‘மாவீருடு’ என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார்.  இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை அதிகமாக திரையங்கில் வெளியிட்டிருந்தது. 

கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 10 கோடியும், இரண்டாவது நாளில் 30.4 கோடியும், மூன்றாவது நாளில் 42 கோடியும், 5வது நாளில் 50 கோடியும் உலக அளவில் வசூலித்திருந்தது.  இந்நிலையில் இப்படம் உலக அளவில் 89 கோடி வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மாவீரன்’ திரைப்படம் பின் தங்கியது படக்குழுவினரை வருத்தமடைய செய்துள்ளது.