×

பின்னி பிடலெடுக்கப்போகும் சிவகார்த்திகேயன்... ‘மாவீரன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு !

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்’ படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமுடன் நடித்து வருகிறார். ‘மாவீரன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

இந்த படம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்தபோதும் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் உடுக்கை மற்றும் ட்ரம் பீட்ஸுடன் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் நடனமும் பட்டையை கிளப்பும் வகையில் உருவாகி வருவதால் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.