×

கொண்டாடப்படும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’.. 50 கோடியை கடந்து புதிய சாதனை !

 

 சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். பேண்டஸி, குடும்ப படமாக உருவாகி உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தமிழை போன்று தெலுங்கிலும் ‘மாவீருடு’ என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை அதிகமாக திரையங்கில் வெளியிட்டிருந்தது.  கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 10 கோடியும், இரண்டாவது நாளில் 30.4 கோடியும், மூன்றாவது நாளில் 42 கோடியும் உலக அளவில் வசூலித்திருந்தது.  இந்நிலையில் இப்படம் உலக அளவில் 50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.