×

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 'விஸ்வரூபம்' பட நடிகர் !

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் 'மாவீரன்' படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தலைப்பு வைக்காத படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ளது. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராகுல் போஸ் நடிக்கவுள்ளார். 'விஸ்ரூபம்' படத்தில் மிரட்டலான வில்லனாக கலக்கியிருந்த அவர் இந்த படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.