ஹாலிவுட் தரத்தில் உருவாகிறதா 'அயலான்'... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !
'அயலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் 'அயலான்'. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த படம் முழுவதும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏலியன் ஒன்றுடன் பயணம் செய்வது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் இதுபோன்ற வித்தியாசமான திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அதிலும் இந்த படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களாலேயே உருவாக்கப்படுகிறது என்றால் எதிர்பார்ப்பு இருக்கதான் செய்யும். இந்த படம் முழுக்க 1500-க்கும் மேற்பட்ட இடங்களில் விஎப்எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் ஒரு ஏலியனும் இறங்கி வருவது போன்று காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் உலக தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.