×

கைதட்டல்களும் விசில்களும் தான் எனக்கு சிகிச்சை- சிவகார்த்திகேயன்

 

தன் தந்தை இறந்தபோது மனச்சோர்வில் இருந்த தனக்கு பார்வையாளர்களின் கைதட்டல்களும் விசில்களும் தான் சிகிச்சையாக மாறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொகுப்பாளர் முதல் நடிகர் வரையிலான தனது திரைப்பயணத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் உரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை குஷ்புவுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “தந்தையின் அகால மரணம் வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியது, மனச்சோர்வில் தன் வேலையைச் செய்யத் துவங்கிய போது பார்வையாளர்களின் விசில்களும் கைதட்டல்களும் தான் சிகிச்சையாக மாறியது. விஜய் டிவியி எனக்கு கம்மி சம்பளம் தான். ஆனா, மரியாதை இருந்தது. சக மனிதனை மரியாதையா நடத்துவதே சுயமரியாதை. மரியாதை கொடுக்காத இடத்தில் இருக்க மாட்டேன். அது எவ்வளவு ஆதாயம் தரக்கூடியதாய் இருந்தாலும் சரி” என்றார்.