×

நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்லிக்காட்ட மாட்டேன்: தனுஷை மறைமுகமாக தாக்கினாரா சிவகார்த்திகேயன்?

 

சூரி நடித்து பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள நடிகை அனா பென் இப்படத்தில்  நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது .

“ஒரு படம் எடுத்தால் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். ஆனால் நான் சம்பாரிப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் ஒரு பெரிய மார்கெட் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் நான் போய் நேர்மையாக என் வேலை செய்தால் எனக்கு கொஞ்சம் காசு கிடைக்கும் . அதனால் இந்த கொட்டுக்காளி படம் வெற்றிபெற்றால் அதன் மூலமாக எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நான் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்பது. நான் கல்லூரி படிக்கும் போது அதிகமான படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது தான் நான் பாலாஜி சக்திவேல் , லிங்குசாமி , கெளதம் மேனன் போன்ற இயக்குநர்கள் இயக்கிய படங்களைப் பார்த்து தான் நான் வந்தேன். பாரதிராஜா தொடங்கி இன்று சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வெற்றிமாறன் வரை சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களுக்கு ஒரு ரசிகனாக நான் கொடுக்கும் புகழாரமாகதான் நான் இந்த கொட்டுக்காளி படத்தைப் பார்க்கிறேன்.



இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்று வினோத் ராஜ் சொன்னபோது அது சாத்தியமாகுமா என்கிற கேள்வி எனக்கு இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் பயணிக்க வேண்டும் என்பதால் இசை வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் அதனால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள். அப்போது தான் இந்த மாதிரியான  படங்கள் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை. நாங்கள் சினிமாவை மாற்றப்போகும் ஆள் கிடையாது. ஆனால் சினிமாவை மாற்றக்கூடிய திறமை வினோத்ராஜூக்கு இருக்கு என்று நினைக்கிறேன். அவருக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம்.  இந்த படத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நன்றாக இருந்தால் எஸ்.கே ப்ரோடக்‌ஷன் சார்பாக இன்னும் நிறைய இயக்குநர்களை அடையாளப் படுத்துவோம். இந்த இயக்குநருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று எல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிட்டார்கள். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை. ஆனால் நான் என்னுடைய நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்துவது போலதான் இந்த படத்தை உங்கள் முன் வைக்கிறேன்  ” என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு தனுஷை தாக்குவது போன்று உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.