×

மொபைல் ஆப் விழாவில் சிவகார்த்திகேயன்  பேச்சு -என்ன பேசினார் தெரியுமா? 

 

ரசிகர்களை தங்களது நடிகர்களுடன் இணைக்கும் ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் மொபைல் ஆப் விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது: இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன் என்றார் .அவர் இந்த விழாவில் பேசியவற்றை பற்றி நாம் காணலாம் 
 இந்நிகழ்வில் சிவகார்த்தியேன் பேசும்போது, "எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன். நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன். ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். கோபிசந்த் சார், மணிகண்டன் சார், உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. கம்மியான மூளை நல்லது இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்!" என்றெல்லாம் பேசினார்..