×

‘அமரன்’ வெற்றி  ‘SK 23’ படக்குழுவுக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்..!

 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதன்படி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 

சிவகார்த்திகேயனின் கேரியரில் 300 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் அமரன் தான். இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் SK 23 படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்.   அதன்படி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து படைத்து தானே பரிமாறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.