தர்ஷன் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்...!
Apr 10, 2025, 16:34 IST
தர்ஷன் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரன் படத்திற்கு பின் மதராஸி, பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன் சார்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, டாக்டர், டான், கொட்டுக்காளி என பல படங்களை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ஹவுஸ் மேட்ஸ் என்ற படத்தை தனது நிறுவனம் சார்பில் வெளியிடப் போகிறார்.
ஹவுஸ் மேட்ஸ் படத்தை பார்த்ததாகவும் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை வழங்குவதாக சிவகார்த்திகேயன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.