×

அட்லீ, அல்லு அர்ஜூன் உடன் இணையும் சிவகார்த்திகேயன்..?

 

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள  திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக இருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளவர் இயக்குனர் அட்லீ. அடுத்ததாக அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்நிலையில் இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள்  கூறுகின்றனர்.