×

குட் நைட் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்

 

சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் .மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தனது 21வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் SK21-ல் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, குட்நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.