×

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

 

'மாவீரன்'  திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எஸ்கே 21' திரைப்படம் உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.