×

சாலையோர வியாபாரிகளுக்கு உதவிய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்...!
 

 

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டன. 

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தேதி வெளியாகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.