×

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஷூட்டிங்... சூழ்ந்த பொதுமக்கள்..!

 

சின்னத்திரையில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ‘ஓடிடி தேதியை இன்னும் தள்ளிவையுங்கள்; திரையரங்கில் நல்ல வரவேற்பு உள்ளது’ என்று திரையரங்கு உரிமையாளர்களே சிவகார்த்திகேயன் மற்றும் அமரன் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 இந்த நிலையில், சென்னை தாம்பரம் பகுதியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதற்காக இன்று காலை முதல் சதானந்தபுரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டு சூட்டிங்கை வேடிக்கை பார்த்ததாள் நெடுங்குன்றம், வண்டலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், சிபிச் சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நடக்கும் படப்பிடிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது