×

நாளை மாஸாக தொடங்கும் ‘SK 21’... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

 

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. 

‘மாவீரன்’ படத்தை சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ளதை அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.

‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான சில பயிற்சிகளையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாளை படக்குழு வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.