×

SK 23 கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

 
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரை வாழ்த்தி வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அதில் ஏ.ஆர் முருகதாஸ் ஆகஷன், கட் மற்றும் படப்பிடிப்பின் போது  எடுக்கப்பட்ட பிடி.எஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
<a href=https://youtube.com/embed/Tih-0FaIZvY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Tih-0FaIZvY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">