×

அஜித்துடன் மோதும் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன்?.. எஸ்கே 23 ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல்

 


ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கும் படத்தில் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் தரமான கம்பேக்கை கொடுத்து தான் யார் என்பதை நிரூபிக்க முருகதாஸ் முனைப்பாக இருக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அடுத்த பொங்கலுக்குத்தான் அஜித்தின் குட் பேட் அக்லியும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.