×

‘SK22’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

​​​​​​​

 

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்துவருகிறார். நடிகை சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி  இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு  காஷ்மீரில் நடந்துவருகிறது. இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 22 வது படமாக உருவாக உள்ள படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவாவுடன் இணைந்து மிருணால் தாகூர் நடிக்கிறார். இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு பிறகு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  சமூக பொறுப்புடன் படங்களை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தையும் அப்படியான ஒரு கதையாக இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.