×

 "மாட்டிகின்னாரு ஒருத்தரு...." டிராகன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு 

 

டிராகன் படத்தில் இடம்பெற்றுள்ள  "மாட்டிகின்னாரு ஒருத்தரு...."  பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. 

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


டிராகன் திரைப்படம் வெளியான  மூன்றே நாட்களில் உலகளவில் 50.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 'டிராகன்' படத்தின் 'மாட்டிகின்னாரு ஒருத்தரு' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.