தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சோனாக்ஷி சின்ஹா...!
Mar 8, 2025, 12:55 IST
நடிகை சோனாக்ஷி சின்ஹா தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளாது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் டபாங் படத்தின் மூலம் 2010-ல் நாயகியாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளர். ஹிந்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கடைசியாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜடதாரா எனும் தெலுங்குப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா இணைந்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக சுதீர் பாபு நடிக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கத்தில் சுதீர்பாபு, ப்ரீரானா அரோரா தயாரிப்பில் உருவாகும் இப்படம் பான் இந்திய படமாக தயாரிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சோனாக்க்ஷியின் புகைப்படத்தைப் பதிவிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.