×

பேய் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்

 


சோனியா அகர்வால் நடித்துள்ள புதிய படத்துக்கு `7 ஜி' என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்மிருதி வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹாரூன் தயாரித்து டைரக்டு செய்கிறார். ஏற்கனவே 2004-ல் வெளியான `7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் சோனியா அகர்வால் நடித்து இருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் நிலையில் `7 ஜி' என்ற பெயரில் படம் தயாராவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டைரக்டர் ஹாரூன் தெரிவிக்கையில், பேய் படமாக 7ஜி உருவாகிறது. இது வித்தியாசமான திகில் படமாக இருக்கும் என்றும், 7ஜி தலைப்புக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றும் தெரிவித்தார்.  அதே எண் கொண்ட வீட்டில் படப்பிடிப்பை நடத்தியதால் படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி தலைப்பை பயன்படுத்தியதாக கூறினார். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.