×

‘சூதுகவ்வும்2: நாடும் நாட்டு மக்களும்’- வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்.

 

‘சூதுகவ்வும்2’ படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செலவன்,ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாக சமீபத்தில் தகவல் வந்தது.

தொடர்ந்து தற்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கு ‘சூதுகவ்வும்2: நாடும் நாட்டு மக்களும்’ என பெயரிட்டுள்ளனர். அதில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். கருணாகரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படபிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.