சூரி நடிக்கும் புதிய படம் -யார் இயக்குனர் தெரியுமா ?
Mar 30, 2026, 06:05 IST
குட் பேட் அக்லி, டியூட் வெற்றிப் படங்களுக்கு பிறகு தமிழில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மைத்ரி தமிழ் 03 (தற்காலிக தலைப்பு) என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று நேற்று நாளை, அயலான் படங்களுக்கு பிறகு இந்த படத்தை ரவிகுமார் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.