×

சூரி நடித்துள்ள 'மாமன்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு ...!

 


சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் ‘மாமன்’ . இந்த படத்தில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார்.


 இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தினை ‘கருடன்’ படத்தை தயாரித்தே குமாரே தயாரித்துள்ளார். அண்மையில் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது.  இந்நிலையில்,  ‘மாமன்’ படத்தின் டிரெய்லர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.