×

  சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் அப்டேட்...!

 

சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்”. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.’மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.