×

சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான்- சூடான டீ கிளாசை ரசித்த சூரி !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக இருக்கும் நடிகர் சூரி தற்போது சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படம் எடுக்க இருப்பதாக இருந்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது View this post on Instagram A post shared by Actor Soori (@soorimuthuchamy)
 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக இருக்கும் நடிகர் சூரி தற்போது சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படம் எடுக்க இருப்பதாக இருந்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சூரி ,தற்போது டீ கிளாசை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்துள்ளார், அதில் ’சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான், ரெண்டு நிமிஷ ஷாட், ரெண்டு மணி நேர படம் பார்த்த திருப்திய கொடுத்துருச்சுனே, மனசெல்லாம் சந்தோஷம்னே’ என சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தியை பாராட்டியுள்ளார். அதேபோல், இயக்குனர் லிங்குசாமியும், ” மனசெல்லாம் படத்தின் இயக்குனர் எடுத்த இந்த ஷாட்-டை பார்க்க நேர்ந்தது. உடனே அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் , இங்கு பகிரவேண்டுமென்றும் தோன்றியது” என கூறி, அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனால் தற்போது இந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

சூரிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளதால் இந்த வீடியோ அதிகப்படியாக ஷேர் செய்யப்பட்டு லைக் செய்யப்பட்டு வருகிறது.